ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
19•07•2016,
செவ்வாய்க்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(16) மனிதனே புனிதன்! –
பள்ளி நண்பர்களுக்காகப் பிரார்த்தனை.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தினமும் பொன்னம்மா பாட்டி அவர்களுடன் அமர்ந்து சூரிய தியானம் செய்து விட்டே பள்ளி செல்லும் பழக்கத்தையும், அதிகாலையில் கணபதி வழிபாடும் தவறாமல் செய்தும் வந்தார்.
இவருள் இருந்து இயக்கும் பராபரமாகிய ஈஸ்வரர் சுவாமிகளுக்குச் செய்யும் வழி காட்டுதல்களும், பக்கத்துணை
இருந்து பாதுகாத்து வருவதும் உண்மையே. தீய எண்ணங்களுடன் நெருங்கியவர்கள் தாமாகவே விலகிச் செல்வதும் கண்கூடு.
பள்ளி நாட்களில் கிராமத்தில் இருந்து புறப்பட்டுப் போகும் PR பஸ்ஸில் இவருக்குப் பள்ளி நண்பர்கள் ஏற்பட்டனர். அவர்களிடம் உலக விஷயங்கள் பற்றிய தகவல்கள் அதிகம் கிடைத்தது. வசதிகள் மிகுந்த பாரம்பரியம் மிகுந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
பள்ளி வாழ்க்கையில் தன்னுடன் படித்தவர்களுக்காக, அவர்கள் துன்பமுற்ற பொழுது குணம் பெறத் தியானம் இருந்து வந்தார்.
முரட்டு மாணவன் ஒருவன் இரக்க குணம் அற்று நடப்பவன் தனது அருகில் பிடிக்காத வகுப்புத் தோழன் அமரும் போது, பேனாவின் மூடியை அகற்றி அவன் உட்காரும் நேரத்தில் பிடிக்க, பேனா ஆசனவாயில் வழியே நுழைந்து விடக் கதறியபடி அழுதவன் இரத்தம் பெருகி வழிய மயக்கமாகிப் போனான்.
சவாரி வண்டியில் படிக்க வரும் மாணவர்கள் அவனை மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர்.சுவாமி அருகில் இருந்து ஜெபம் செய்ததால் கோபம் கொண்ட அதே மாணவன் சுவாமி அவர்கள் வகுப்புக்குள் வந்த நேரத்தில் பெரிய மேஜையை காலில் விழவைத்தான். பலமான அடியும் இரத்தக் காயமும உண்டானது. அப்போது வெங்கடாசலம் என்பவர் சுவாமியை எப்போதும் தவம் பற்றிக் கேலி செய்தவர் மனம் திருந்தி உதவிகள் செய்தார். இப்படிப்பட்ட மனமாற்றமும் வரவேற்கத்தக்கதே என்பார் சுவாமி. ஜெபமும், தியானமும் சமுதாயத்திற்குப் பேருதவிகள் புரியும் என பலமுறை வலியுறுத்திக் கூறுவார்.
இவருக்குப் புகழ்வது பிடிக்காது. ஊக்கம் அளிக்கும் பாராட்டுக்கள் அதுவும் தேவையுடன் இருக்க வேண்டும்.மாலையில் வீடு திரும்பி ஆழியாற்றுக்குச் சென்ற போது, எதிர்க்கரையில் பசும்புல்லின் மீது ஒருவர் மிகுந்த தேஜஸூடன் படுத்துக் கால் மீது கால் போட்டபடி நமது சுவாமியைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
அவர் மீது அன்பு ஊற்றெடுக்க சுவாமி அவரைப் பார்த்தார்.சுவாமி கவனிப்பதைக் கண்டு வேறுபுறம் அவர் திரும்பிப் படுத்துக் கொண்டார்.சுவாமி தனது குளியல், ஜெபம் செய்து விட்டுக் கரைக்கு வந்த போது அவர் தென்பட வில்லை.சுவாமி பள்ளிக்குப் போனாலும் வேறு எங்கு சொன்றாலும் அவர் தென்படலானார். சுவாமி நெருங்க முயன்றால் அவர் விலகிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது.
சுவாமி நாகராஜ் அவர்களுக்கு எல்லா நேரமும் அவரின் எண்ணமே மேலோங்கியது. அதில் ஏதோ ஒன்று மனதில் இன்பம் கலந்த வேதனையை ஏற்படுத்தியது.
அவரது தரிசனத்திற்காக மனது ஏங்கியது. கனவிலும் தோற்றம் ஆனார். ஆற்றில் குளிக்கும் போது மறு கரை வரை நீந்திச் சென்று, அவர் படுத்திருக்கும் இடம் அருகே உட்கார்ந்தபடி அவரைக் கவனிப்பார். அவர் பேசுவதுமில்லை, இவரைக் கவனிப்பதும் இல்லை.
சைக்கிள் பழகி வெகு வேகமாகச் சென்று கொண்டிருக்கும் போது எதிரில் அந்த மகான் வரவும், சைக்கிளைப் பாதையில் இருந்து விலக்கிப் பள்ளத்தினுள் பட்டணக் கள்ளிப்புதர் மீது சைக்கிளும், சைக்கிள் மீது சுவாமியும் விழுந்து கிடந்த கோலம் கண்டு இடிஇடித்தது போன்று சிரித்துக் கொண்டு நின்றார். பலமிக்க குரல்! மேலே வந்த சுவாமியை ஆசீர்வதித்து விட்டு வேகமாகச் சென்று விட்டார். ஆனாலும் சுவாமி எங்கு சென்றாலும் அவர் தென்படுவது புத்துணர்ச்சியை உண்டாக்கிற்று.
பாட்டி அவர்களிடம் இதுபற்றி சூசகமாகக் கூறியதும் அவர், “சிவமே குருவாக வரவேண்டும் என்று எண்ணத்தைச் செலுத்து.
உனக்கு அதுபற்றிய ஏக்கம் உருவாக வேண்டும். ஏக்கம் சந்தோஷமான ஏக்கமாக இருக்க வேண்டும். வருத்தம் உள்ள நேரத்தில் தியானம் செய்யாதே. அதனால் சக்தி மண்டலம் பாதிப்பை அடையும். அதனால் மனமும் கெட்டு உடல் பாதிப்பு ஏற்படும். வருபவர் உனக்கு வேண்டியவர் தான். நெருப்பில் குளிர் காய்வது என்பது, விலகினால் குளிரும், நெருங்கினால் சுடும். இனி உனது அறிவை உபயோகப் படுத்துவதால் எல்லோருக்கும் அது பயனாகும்” என்றார். சுவாமி மெளனமாகக் கேட்டுக் கொண்டார்.
இந்த சமயத்தில் தான் இந்தி எதிர்ப்புப் போராட்டம் துவங்கியது.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
– ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.