ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
14•07•2016,
வியாழக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(11) மனிதனே புனிதன் —
ஆத்மஜோதி தரிசனம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தவம் செய்து பக்குவம் வராது போனால் என்னென்ன செய்வார்கள்? தனக்கு எல்லாம் கற்றுக் கொண்ட வித்தைகள் தெரியும் என்ற எண்ணம் வரும். உடல் அமைப்பில் மாறுதல் ஏற்படும். தேஜஸ் குறைந்து வரும்.என்னிடம் வா கற்றுத் தருகிறேன் என்று சொல்வார்கள்.
எனக்கு தெய்வ சக்தி வந்து உள்ளது என்று கூறி அருள் வாக்கு சொல்வது; உனது குடும்பத்தில், சண்டை, சச்சரவு, பிரச்சினை வரும் என்று எச்சரிக்கை விடுத்துக் கெடுதல் செய்திகளைச் சொல்லி,
தங்கள் பொறாமை குணத்தை மறைமுகமாக வெளிப்படுத்தும் செயல் செய்து விடுவார்கள். கடைசியில் உடல் கெட்டு தங்களையும், தங்கள் குடும்பத்தையும் கேடடையச் செய்து கொள்வார்கள்.
அநேகம் பேருக்கு நல்ல குருநாதர் கிடைத்தும் பயன்படுத்திக் கொள்ளாமல், அதிகார மமதையில் மூழ்கி விடுவார்கள். அதனால் தீயசக்தி அலைகள் உடனடியாக (பீட்டா சக்தி அலை) உடனடியாகச் செயலுக்கு வந்து விடும். இதனால் தான் ஆன்மிக செயலில் முன்னுக்குப்பின் முரணாக நடந்து கொள்வதும், பிறரைக் குழப்பத்தில் ஆழ்த்தி விடுவதும் நடை பெறுகிறது.
இதைப்பற்றி நமது சுவாமி விரிவாகச் சொல்வார்கள். கேட்டிருக்கிறேன். சிலர் உடலில் ஆவிகள் நுழைந்து சாமி ஆடி அருள் வாக்கு சொல்வதும், இதே சக்தி அலை மூளையில் உருவாகி விடுவதால் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வார்கள். சாதனை செய்பவர் நலன் கருதியே இதனைக் கூறுகிறேன்.
நமக்கு இத்தகைய குணத்தன்மைகள் வரவே கூடாது.பிறருடைய நம்பிக்கை மற்றும் கொள்கைகளுக்கு கேட்டால் தவிர கருத்துக்கள் சொல்லக் கூடாது. விவாதம் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் கூடவே கூடாது.
நமது சுவாமி அவர்கள் மற்றவர்களுடன் அதிகம் பழகாமல் தனிமையை விரும்பக் காரணம் இருக்கிறது. மனிதர்கள் பலர் மாற்று உருவம் போல் இவருக்கு தென்படலாயினர்.
இவைகளை அமானுஷ்யங்களா அல்லது மனிதனின் எண்ணத் தோற்றமா? என்ற வினா அவருக்குள் எழச் சற்று பய உணர்வு ஏற்படலாயிற்று.
அது மேலும் அதிகப்படவே இரவு படுக்கையில் உறங்கச் செல்லும் நேரம், அவருக்கு நேர் மேலே ஒளி வடிவ உருவம் ஒன்று தென்படலானது. பரவசமும் உண்டானது. அதன் கரங்கள் அவரை அணைத்து ஐக்கியமாக்கும் நிலையில் மயங்கி உறங்கிப் போவார்.
இப்படிப் பல முறைகள் நடந்ததால் அதிகாலையில் பயத்துடன் எழுவதும், வீட்டுப் பெரியவர்கள் விபூதியை அபிமந்திரித்துப் பூசுவதும் தொடர்ந்தது. சுவாமி அவர்களுக்குப் பத்து வயது நடக்கும் வரையிலும் இந்த அகக் காட்சியும், புறக் காட்சியும் இருந்து வந்தது. அப்பா அவர்கள் இவருக்கு தினமும் தைரியம் சொல்லி மனதைத் தேற்றுவார்.
பின்னாளில் குருவின் சகாயத்தால் அது மனிதனின் ஆன்ம நிலை என்றும், சூக்குமமாக உறங்கும் நேரத்தில் வெளிப்படும் என்றும், பிறகு உடலுடன் ஐக்கியமாகும் என அறிந்து கொண்டார்.
குரு காட்டிய வழியில் சாதகன் நம்பிக்கையுடன் செல்ல வேண்டும். தெளிவுடன், வேறு சிந்தனைகள் அற்று தியானத்தில் ஈடுபடுவது அவசியம். தொடக்கம் சரியாக அமைந்து விட்டால் அதுவாகவே நாம் மாறி விடுவோம். அது நம்மைச் சரியான வழியில் அழைத்துச் செல்லும்.
பள்ளிப்பருவ நாட்களில் ஆசிரியரிடம் விசுவாசமும், குரு பக்தியும் மிகுந்தவராக நடந்து கொண்டார். இவரது தெய்வீக குணத்தன்மை கண்டு கிராம மக்கள் அன்புடன் இவரிடம் நடந்து கொண்டனர்.
பாட்டி பொன்னம்மாள் இவருக்கு தெய்வீகத் தொடர்புகள் ஏற்படவும், மனம் ஒன்றி அதிலே இலயிக்கவும், கண்களை இமைக்காமல் இருக்கவும்,- சூரியனை வெகுநேரம் பார்த்துப் பழகவும் சொல்லிக் கொடுத்தார். மனதை வெறுமையாக வைத்திருப்பதால் ஏற்படும் பலாபலன்களைப் புரிய வைத்தார்.
சன்னியாசி மார்க்கம் பற்றியும் தனக்கு அதில் அதிக நாட்டம் இருப்பதாக பாட்டியிடம் சுவாமி கூறினார். அவர்கள் அதற்குக் கடைசி வரையிலும் ஆதரவு தரவில்லை. பாட்டி சொல்லும் வார்த்தைகள் பலிதமாவதைக் கண்டதால் பேசாமல் மெளனமாகி விடுவார். சுவாமி மெளன விரதம் அடிக்கடி இருப்பது வழக்கம். அதற்குப் பாட்டி ஊக்கம் தருவார். சித்தத்தில் உணர்வு கூட மனதை சூன்யமாக்கிக் கொள்வது இருவருக்கும் கைவந்த கலை.
அடுத்து நீரினுள் ஓர் அனுபவம் பற்றி கூறுகிறேன். இந்த வரலாறு சிலருக்கு ஏதோ கற்பனை போல் தோன்றுவது தவிர்க்க முடியாது. நமது அறிவுக்கு எட்டாத பல சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. நாம் பெற்ற பாக்கியம் இவரைச் சந்தித்தது!
(மனிதனே புனிதன் வரலாறு தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.