ஹடயோகியின் கணிப்பு!

0 151

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

13•07•2016,
புதன்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(10) மனிதனே புனிதன் —
ஹடயோகியின் கணிப்பு!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுவாமி குடும்பத்தினர் குடியிருந்த வீட்டின் அருகாமையில் தங்கவேல் என்பவருக்கு சொந்தமான இடமும், பெரிய கூரை வேய்ந்த வீடு இருந்தது. தங்கவேல் அவர்கள் தாடி மீசையுடன் சன்னியாசி போன்று இருப்பார்.பல
வித்தைகள் கற்றவர். யோகம், மருத்துவம், ஜோதிடம் எல்லாம் கற்றதனால் வாத்தியார் என அழைக்கப் பட்டவர்.

வாத்தியார் வீட்டிற்கு ஹடயோகி ஒருவர் வந்து தங்கி இருந்தார்.அவர் தங்கவேல் வாத்தியார் அவர்களின் குரு. இரவில் ஹடயோகியின் நெற்றியில் பெரிய தீபம் ஒன்றை ஏற்றி வைத்துப் படுத்திருப்பார். குழந்தைகள் எல்லாம் சந்தடி இன்றிச் சென்று, ஜன்னலில் கட்டித் தொங்கும் சாக்குப் படுதாவை நீக்கி உள்ளே படுத்து உடலின் மீது தீபங்கள் வைத்து யோகம் செய்யும் அவரைப் பார்த்து விட்டு வருவார்கள்.

சிலர் அதனைக் கண்டு பயந்து உடல் நலம் குன்றிய போது, சுவாமி அவர்கள் தலைமையில் சிறுவர்கள் கூட்டம் ஆலோசித்து தங்கவேல் வாத்தியார் வீட்டிற்கு யோகி இல்லாத நேரம் பார்த்துச் சென்றார்கள்.

வாத்தியார் வீட்டில் பெரியசாமி என்ற பையன் வீட்டு வேலைகள் செய்து வந்தவரிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள். அவரும் கோபித்து, “மற்றவர்கள் பூஜைக்கு இடையூறாக இருப்பது தவறு. யோகிகள் சாபம் பொல்லாதது. தெய்வங்களுக்கு ஏதாவது உணவு படைக்கலாம்” என்று கூறினார்.

அதனை ஆமோதித்து ஒவ்வொரு வீட்டில் இருந்தும் சிறுவர்கள் சமையல் பொருட்கள் கொண்டு வந்து சமைத்து படையல் இட்டு வழிபாடு செய்தனர்.

மனத்திருப்தி ஏற்பட்டதால் உடல் நலம் பெற்றனர். ஹடயோகி திரும்பவும் அங்கு காணப்படவில்லை.

சுவாமி அவர்கள் வாழ்க்கையில் நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரணம் இருப்பதோடு அதற்கு உரிய விடைகளும் இருக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த தெய்வ ஆகாரப் படையலை பிறருக்கும் கொடுத்து பசி போக்கும் அன்னதானமாக்கி விட்டனர்.

தங்கவேல் வாத்தியார் அவர்கள் சுவாமி ஜாதகத்தைக் கணித்து, நாகராஜன் என்ற நாமகரணம் சூட்டியவர். அத்துடன் குடும்பத்தினருக்கு உபயோகம் இல்லை. ஜாதகன் ஊருக்கு உபகாரி என்று கூறினார்.

சுவாமி அவர்கள் தகப்பனார் இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.சுவாமி நாகராஜ் அவர்கள் மீது பிரியம் இல்லாதவராக தந்தையை ஆக்கி விட்டது ஜோதிடர் வாசகம்.

இதனை சுவாமி அவர்கள் குறிப்பிடும் போது “தெய்வீக தன்மையை அடைய விரும்பும் ஒருவருக்கு இத்தகைய தடைகள் இல்லை என்றால் ஜெயிக்க வேண்டும் என்ற சிந்தனை வராது.மற்றும் எதிர்ப்பாளர்கள் நமக்கு நல்ல வழிகாட்டிகள். ஆரஅமர சிந்தித்து போகும் பாதைக்கு நல்ல முடிவுகள் எடுக்க உதவி செய்வதால் அவர்கள் போற்றத் தக்க வர்கள். அவர்களுக்கு அதிக உதவிகள் செய்ய வேண்டும்” என்றார்.

“கேடு விளைவிப்பவர்களுக்கும் உதவினால் தொடர்ந்து தொல்லைகள் தரமாட்டார்கள்.அவர்கள் திருந்த வாய்ப்பு உண்டாகும்” என்றும் கூறினார்கள். பலதடவை இதைப்பற்றி யோசிக்க என்னை வைத்து விட்டார்.

இவரது பள்ளி வாழ்க்கை அவ்வளவு சுவாரஸ்யம் உடையது என்று கூறமுடியாது. தனிமையை விரும்பும் ஒருவருக்கு உலகோதய வாய்ப்புக்கள் அதிகம் உண்டாகாது. இவரது பள்ளி ஆசிரியர் திரு.காளிமுத்து அவர்கள் கண்டிப்பு மிக்கவர்.

தந்தை இவரைப் பள்ளியில் சேர்க்கும் போது வலது கையால் இடது காதைத் தலைமீது தொடச்சொல்ல எட்டாததால்
வருடம் ஒன்றைச் சேர்த்ததால் பள்ளிச் சான்றிதழில் பிறந்த தேதி மாதம் வருடம் எல்லாம் மாறி விட்டது. ஏன் இவரது தலையெழுத்துக் கூட மாறித்தான் போனது. எல்லாம் கடவுளின் சித்தப்படியே நடக்கட்டும் என்று சுவாமி அடிக்கடி சொல்வார்.

குரு தட்சினை கொடுத்து பாதநமஸ்காரம் செய்தவருக்கு அதிர்ச்சி. “கண்ணையும் காதையும் விட்டு விட்டுத் தோலை உரித்து விடுங்கள்” என்று தகப்பனார் கூறியதும் ஆசிரியரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டார். பயப்படாதே தைரியமாக இரு என்றார் ஆசிரியர். அக்கால கட்டத்தில் எல்லா தந்தைகளும் தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் போது வழக்கமாகச் சொல்லும் ஒரு வசனம் நமது சுவாமி ஞான போதனைகளை உலகிற்குச் சொல்ல வந்தாரோ என்னவோ? ஆனால் ஈஸ்வரர் சித்தத்தை நிறைவேற்ற வந்தவர் என்பதில் கருத்து வேறுபாடே கிடையாது.
எள்ளளவும் சந்தேகமும் இல்லை!

தியானத்தின் சக்தி அலைகள் நமது சிரசில் செயல் படும் போது நான்குவித சக்தி அலைகளாக உருவாகும். இவைகளைப் பெற்றவர்களின் செயலில் இருந்து நாம் கண்டு கொள்ளலாம.அதிசயங்களை நிகழ்துவது ஒரு சக்தி அலை.
கேடுகளை விளைவிக்கும் இன்னொரு சக்தி அலை. உள்முகமாகத் திருப்பி மெளனம் ஆக்கிவிடும் மற்றொரு சக்தி அலை. மிகவும் சக்தியுடைய மற்றொன்று சமாதியில் இருக்கவும், அதற்கும் மேம்பட்ட ஆற்றலைத் தரவும் பயனாகும்.

சிலர் கேடுகளையும் வியாதிகளையும் தரும் சக்தி பெற்று இருப்பார்கள்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்
மதுரை M. மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button