தியானத்தில் சுவாமிகள்!

0 182

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

12•07•2016,
செவ்வாய்க்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(9) மனிதனே புனிதன் —
தியானத்தில் சுவாமிகள்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுவாமி அவர்கள் பாட்டி பொன்னம்மாள் கூறிய ஆலோசனைப்படி தியானம் செய்து வரலானார்.அதில் மனதை வெறுமையாக வைத்திருப்பதால் உள்ளில் சக்தியின் ஆற்றல் பெருகும்.அதைத் தேவையானால் உபயோகப் படுத்தலாம் என்பதே!

ஆரம்பத்தில் மன அமைதி பெறும் விதமாகத்தான் ஆரம்பித்தது.இதன் சக்தி ஆற்றல் பெருகப் பெருக சமுத்திரத்தில் புயலின் போது எப்படி இருக்குமோ
அப்படியொரு உணர்வலைகளின் வேகத்தைத் தாங்கிக் கொள்ளவே மனதை
வெறுமையாக ஆக்கிக் கொள்வது தான் பயிற்சி.

சமண சித்தர்களின் சிலைகளைப் பார்த்தால் மூன்று வட்டக் குடைகள் போன்று காட்டப் பட்டிருக்கும். இது தியானத்தில் அடைய வேண்டிய மூன்று நல்ல சக்திகளைக் குறிப்பிடுவதாகும்.
இதனை ஆங்கிலத்தில் ஆல்பா- தீட்டா- டெல்டா என்று கூறுவார்கள்.

மற்றொன்று தீமையைத் தரும் சக்தி அலையை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். குருவினிடம் இந்த வித்தையைக் கற்றுக்கொள்வார்கள்.நீரையும் பாலையும் கலந்து வைத்தால் அன்னப் பறவை பாலை மட்டுமே சாப்பிடுமாம்.அதனைப் போன்றது.

மன அமைதி பெறும் இத்தியானத்தில் பல்வேறு உருவங்கள் கண்ணில் தெரிய ஆரம்பித்தள்ளது.
மனிதனுடைய ஆசாபாசங்களும் அசாதாரணமான உருவமாகக் காட்சி அளிக்கத் தொடங்கியது. அதன் பின் மனிதர்களின் வெளித் தோற்றத்தை விட உள் மனம் மிகவும் மோசமானதாக உள்ளது என்பதனை அறிய ஆரம்பித்துள்ளார். சூக்குமத்தில் இருக்கும் உருவங்களும், தனது முற்பிறவியின் உண்மைகளும் தெரிய ஆரம்பித்தது.

சாதாரணமாக ஒருவரின் தியானம் எடுத்த உடனேயே பலன் தரும் என்று சொல்ல முடியாது.எல்லா வகையிலும் பரிபூரண ஆசீர்வாதம் கிடைத்தாலன்றி சாத்தியம் அரிது.

சூக்குமத்தில் உள்ள மகான், சித்த பெரு மக்களிடம் இவர் பேச ஆரம்பிக்கும் பொழுது, சாதாரண மக்கள், இவருக்கு சித்தபிரமை ஏற்பட்டு விட்டது என்றும் ஆகவேதான் இவர் தானாகப் பேசுகிறார் என்றும் கூற ஆரம்பித்துள்ளார்கள்.

ஆனால் இவரது பாட்டி மட்டும், ஏதோ ஒரு தெய்வீக சக்தி தனது பேரனை வழிநடத்திச் செல்கிறது என நினைத்து அவர் வழியிலேயே விட்டு விட்டார்கள். நமது சுவாமி அவர்கள் மஹா ஜோதியின் சக்திக்கு இசைவாகவே தனது வாழ்க்கைப் பயணத்தினையும் தொடர ஆரம்பித்துள்ளார்கள்.

தினமும் காலையில் பாட்டி இரண்டு மணிநேரம் சூரிய தியானம் செய்து வருவார்கள்.
இவரும் உடன் அமர்ந்து தியானம் செய்து பல உண்மைகளை அறிந்து கொண்டுள்ளார்.

மரணம் என்னும் விடுதலை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுவாமி நாகராஜ் அவர்களின் விளையாட்டுத் தோழர்கள் சிலர் அகால மரணம் எய்தியதை அருகே இருந்து பார்க்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டது. ரோடு ரோலர்,லாரிகள், சைக்கிளில் சென்றோ அல்லது அருகே ஓடிச் சென்றோ மரணம் அடையும் நேரத்தில் அமானுஷ்ய உருவங்கள் செய்யும் தீமைச் செயலைக் கண்ணுறும் காட்சிகளைக் கண்டிருக்கின்றார்.

அவைகள் அவர் மனதில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட சமயங்களில் விளக்கின் முன் அமர்ந்து கண்கள் இமைக்காமல் ஜோதிச் சுடரைப் பார்த்து துக்கங்களை நீக்கிக் கொள்ளப் பழகிக் கொண்டார்.

அத்துடன் பிராணாயாமத்தில் மூச்சில் ஜெபம் செய்து
கொண்டே பயனுள்ள வகையில் பயன் படுத்தும் மார்கத்தை அறிந்து கொண்டு விட்டார்.
மரணமும் ஒருவகையில் சந்தோசம் நிறைந்த வாழ்க்கைக்கு மனிதனை அழைத்துச் செல்லும் என்று எண்ணி வரலானார்.கிராமத்து மக்கள் “சுவாமி ” என்று இவரை
அழைக்கலாயினர்.

[மனிதனே புனிதன் வரலாறு தொடர்ந்து வரும்]

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button