மஹா ஞானியின் தரிசனம்.

0 167

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

09•07•2016,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(6) மனிதனே புனிதன் — மஹா ஞானியின் தரிசனம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமது சுவாமி அவர்கள்
பிறந்த வருடம் 1950
மாதம்,தேதி: ஆகஸ்டு 24
கிழமை : வியாழன்
நட்சத்திரம் : உத்திராடம்.
நேரம் :இரவு நடுநிசி 12 மணிக்கு முன்
தமிழ் ஆண்டு : விக்ருதி
தமிழ் ஆவணி மாதம் 8-ந்
தேதி.
[பள்ளிக் கூடத் தேதியில் மறந்து 04•11•1949 என்று பதிவு செய்து விட்டனர்]

நமது சுவாமிகளின்
தாத்தா(அப்பாவின் அப்பா)
மலேயாவின் ரங்கோனில் இருந்து ராஜூலாக் கப்பலில் பயணித்து நாகபட்டினம் வரும் போது புயலால் சிக்கி தவித்து இருக்கிறார்.

அப்போது நாகூர் ஆண்டவரிடம் காப்பாற்ற வேண்டிப் பிரார்த்தனை செய்திருக்கிறார். “பேரன் பிறந்தால் உனது பெயரைச் சூட்டி அழைக்கின்றேன். காப்பாற்ற எழுநிலை வேண்டும்”
இது தாத்தா திரு.பழனியப்பன் அவர்களின் மனம் உருகிய வேண்டுகோள். அதுவும் பலித்தது!

நல்ல படியாகக் கரை சேர்ந்து நாகூர் சென்று அந்த மகானை வழிபட்டு பின் வீடு திரும்பி உள்ளார்.
இரண்டு பேரன்கள் பிறந்து இறந்து மண் அறையின் வாயில் வழியே அடககம் செய்தாகி விட்டது.

மூன்றாவது பேரனுக்கும் வழி அனுப்பும் நேரம் வந்து விட்டதே என்று கண்ணீர் விட்டபடியே, தனது தங்கை பொன்னம்மாளிடம் தனது வேண்டுதலைக் கூறிப் புலம்பி உள்ளார்.

தவவாழ்வு வாழும் தங்கை அவருக்கு ஆறுதல் கூறிப் “பயப்பட வேண்டாம். அவன் எழுந்து கொள்வான்” என்றதும், தனது தங்கை பொன்னம்மாளுக்குப் பேரன் போனதில் மூளைக் கோளாறு ஏற்பட்டதாக எண்ணி வாய்விட்டு உரத்து இறைவனை வேண்டி இருக்கிறார்.

மத்தியான வேளை;உச்சிப் பொழுது. வீட்டு வாயிலில் தேஜஸ் மிகுந்த அழகிய வாலிபன் சன்யாசித் தோற்றத்தில இசைக் கருவி ஒன்றை இசைத்தபடி சிரித்துக் கொண்டு நின்றிருக்கின்றார்.

குழந்தையை அடக்கம் செய்து விடலாம் என்று கூறியவர்களை அமைதியாக இருக்கும் படி சொல்லி விட்டு, வாயிலில் நிற்கும் மகானைப் பார்த்தார் பொன்னம்மாள்.

அழுதபடியே உள்ள மகளை அழைத்துச் சென்று இருவரும் அவரது திருவடி தொழுது காப்பாற்ற வேண்டும் என்று கூறினர்.

அவரும் வீட்டில் என்ன அழுகை சப்தம்? அதனைக் கேட்டுத்தான் தாம் வந்ததாகவும், பயம் வேண்டாம் என்று கூறி வீட்டினுள் சென்று குழந்தையின் உடல் அருகில் அமர்ந்து கொண்டார்.

குழந்தையின் உச்சியில் தமது வலது உள்ளங்கையை வைத்து ஜெபித்தபடியே உடல் முழுவதும் மூன்று தடவைகள் தடவிக் கொடுத்தார்.

பிறகு உடைக்காத தேங்காய், இரண்டு வாழைப்பழம், எலுமிச்சை, வெற்றிலை பாக்கு தட்டில் வைத்து வாசனை பத்தி கொளுத்தி வைத்து கண்களை இமைக்காது பார்த்த படியே இருந்தார். சிறிது நேரத்தில் குழந்தை கண்விழித்துப் பார்த்தது.

அன்றைய தினம் ஹஸ்த்தம் நட்சத்திரம், அபிஜின் முகூர்த்தக் காலம். மதியம் மணி 12.

குழந்தையை எடுத்து தனது மடியில் வைத்துக் கொண்டார். வீட்டினர் மிகவும் சந்தோசம் அடைந்தனர்.பாட்டியிடம் குழந்தையைக் கொடுத்து,

“இவனை நாம் உலகினர்க்கு ஒப்படைக்கும் காலம் வரும் வரையில் பாதுகாப்பாக வைத்திருப்பாயாக ” என்று கூறி விட்டுப் புறப்பட்டுச் சென்று விட்டார்.

சிறிது நேரத்தில் குழந்தையைக் காத்த மகான் எங்கே என்று தேடினர். இமைப் பொழுது நேரத்தில் மறைந்து விட்ட அவரை எங்கு தேடியும் கிடைக்க வில்லை.

அன்று முதல் நமது சுவாமி வீட்டார் பூஜையின் போது தேங்காய் உடைக்காமல் அப்படியே வைத்து வழிபடத் தொடங்கினர்.

இவரின் பாட்டிக்குத் தெரியும் தனது பேரனை ஒரு மஹா சக்தியின்
அவதாரம் சூக்குமத்தில் ஆட்கொண்டுள்ளது என்று.

(இனி இவரது பாலப்பருவம் பற்றிய, மனிதனே புனிதன் வரலாறு தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button