எனக்கு சுவாமி மட்டுமே வேண்டும்!

0 159

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

07•07•2016,
வியாழக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(4) மனிதனே புனிதன் — “எனக்கு சுவாமி மட்டுமே வேண்டும்!”
••••••••••••••••••••••••••••••••••••
“மாங்காய்ப் பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத் தேங்காய்ப் பால் ஏதுக்கடி – குதம்பாய் ”

என்ற பாடல் வரிகளைக் கேட்காத சித்தர் இலக்கியத் தொடர்புள்ள மக்கள் இருக்க முடியாது.

இது ஞானக் குதம்பைச் சித்தர் பாடல்கள். அவர் சிறுவனாக இருந்த பொழுது ஞானம் பெற்றுப் பாடிய முதல் பாடல்,

“வெண்காய முண்டு – மிள குண்டு – சுக்குண்டு
உன் காயம் ஏதுக்கடி? குதம்பாய்!
உன் காயம் ஏதுக்கடி?”
–என்று ஞானத்திலிருந்து பாடினார்கள்.

இது போன்றே நமது சுவாமி நாகராஜ் அவர்கள் சிறு குழந்தைப் பருவத்தில்
அவரின் ஆத்மாவில், மஹா ஜோதி சொரூபமான ஈஸ்வரபட் சுவாமி அவர்கள் ஐக்கியமாகி, சூக்குமத்திலிருந்து இயக்கி வருகின்றார்.

சோழவள நாட்டின் திருமுல்லைவாயிலில் தனது முற்பிறவியின் விட்ட குறை, தொட்ட குறையின் பலனாய், விட்டுப்போன, “சிவ சாகாக் கலை, ஞானச்சுடர்” எனும் ஆத்மஞானப் பாடல்களை இப்பிறவியில் முடித்துள்ளார்கள்.

அப்பாடல்களின் முதல் பாடல்,

எங்காயந் தோன்றிய தெவ்வாறு – அது
உங்காயந் தேடிய தென்னவகை
எங்காய முங்காயம் வெண் காயமானது சாற்றிய எங்குரு ஈஸ்வரனே.

உலகிலுள்ள செல்வ வளங்களை நமது சுவாமி அவர்கள் முன் காட்டி,
“எது வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்” என்றும்,

பலவிதமான சாஸ்திரங்கள் ,வான சாஸ்திரம், மருத்துவம், ஜோதிடம், தாந்த்ரீகம், போன்றவற்றைக் குறிப்பிட்டு , “உனது பிழைப்பிற்கு எது வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்”
என்று கூறிய போது,

“நிலையான பராபரமாகிய மஹா ஜோதியின் ஐக்கியத் தன்மை ஒன்று மட்டும் கிடைத்தாலே போதும்; நிலையில்லாப் பொருட்கள் தேவையில்லை” என அவரிடம் கூறி “தனக்கு சுவாமி மட்டுமே வேண்டும்” என்று கூறியுள்ளார்கள்.

அதற்கு மஹா ஜோதி சொரூபமான சுவாமி அவர்கள், “என்னை வேண்டில் உலகில் உள்ள கஷ்டங்களை அனுபவிக்க வேண்டுமே, அதற்குத் தயாரா?” என வினவினார்.

“மஹா ஜோதி சொரூபமான தாங்கள் என்னுள் இருக்க எந்தவித துன்பத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயார் ”
என்று கூறி அனைத்து கஷ்டங்களையும் உலக மக்களுக்காக ஏற்றுக் கொண்டார்கள்.

ஒரு மஹா சக்தி சொரூபமான ஜோதியின் உன்னத அவதாரத்தினை மெய்யில் ஏற்றுக் கொண்டு, இவ்விஞ்ஞான உலகில் எளிய பாமர மக்களும், இவ்வுலகில் துன்பமில்லாப் பெருவாழ்வு வாழ்வதற்கு, ஞானயோகத்தின் அருந்தேனை நாடிவரும் மக்களுக்குத் தேடிப்போய் உத்தேசித்து வருகின்றார்.

இதனைக் கடைபிடிப்போர்கள் வளமுடனும், நலமுடனும்,
செல்வச் செழிப்புடனும் வாழ்கின்றனர்.

இவ்வளவு ஞானவளம் நிறைந்த தவத்திரு நாகராஜ் சுவாமி அவர்கள்,
இப்பூவுலகில் பிறந்த வாழ்க்கைப் பாதையின் வரலாற்றைப் பின்நோக்கிச் சென்று ,
அதனை பக்தர்களுக்கும் வெளி உலகிற்கும் தெரிவிக்க மிகவும் பிரியமுடன் இருக்கின்றேன்.
ஈஸ்வர பட் சுவாமிகளைப் பற்றி எனது குருநாதர் தவத்திரு வேணுகோபால சுவாமியிடம் ஒரளவுக்கு ஆறிந்துள்ளேன்.

பழனி தவத்திரு நடராஜா சுவாமி இடத்திலும் அவரின் அற்புதங்கள் பற்றி அறிந்திருக்கிறேன்.

ஆனால் ஈஸ்வர பட் சுவாமி என்ன கருத்துக்கள் உங்களிடம் கூறினார்கள் என்று கேட்டால், “கேரளா செல்லும் வழியில் ஒரு கிராமத்துப் பையனிடம் பாடங்களை போதித்துக் கொண்டு அவனுடனேயே நான் இருக்கிறேன்” என்பார், “எங்கும் உள்ள சுவாமி அப்பா அவர் “என பக்திப் பரவசத்துடன் கூறுவார்.

நாகராஜ் சுவாமிகளைப் பற்றி மிகவும் அன்புடன் செய்திகள் சொல்வார்.அவருக்கும் இவரைப் பற்றி நிறைய அறிந்திருக்கிறார்.

ஈஸ்வர பட் சுவாமி பற்றிய செவிவழிச் செய்திகளும்,
நமது நாகராஜ் அவர்கள் தனது குருநாதருடன் நேரில் கேட்டறிந்து கொண்ட பாடங்களுடனும் பதிவு செய்கிறேன்.

நீ வேறு அல்ல நான் வேறு அல்ல என்று ஐக்கிய நிலை பெற்று இன்றும் நம்மிடையே வாழும் ஞானியாக, மிகவும்
எளிமையாக,

குழந்தைகள் கேட்டாலும் மதிப்பும் மரியாதையும் கொடுத்து பதில் சொல்லும் இவரிடம் சற்குருவைப் பற்றி அறிந்து கொள்வதுதான் உண்மை உரையாக இருக்கும்.

மற்றவர்கள் எதையுமே மிகையாகக் கூறுவதால் ஈஸ்வர பட் சுவாமி பற்றிய தெளிவு இல்லை.தங்களிடம் வந்து அருள் வாக்குக் கேட்க பத்து வாரங்கள் வாருங்கள் என்பர்.

அவரைப்பற்றிய செய்திகள் அவரே என்மூலமாக பேசுகிறார் வாருங்கள் என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

அற்புதமான மகான் ஈஸ்வர பட் மஹா ஜோதி அவர்கள். நல்ல போதனைகள் கூறியவர். பேரைக் கேட்டாலே சகல பாவங்கள் தீர்ந்து விடும்.
நேரில் கண்டு தரிசனம் பெற்று இன்றும் அவரின் பாடங்களை அற்புதமாக கூறிக் கொண்டு இருக்கும் சுவாமி நாகராஜரிடம் குரு சிஷ்ய மனோ பாவனை பரிபூரணமாக உள்ளது.

சுவாமி அவர்கள் ஆசியுடன் தொடங்குகின்றேன்.(இன்னும் வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரர் தொண்டன்
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button