முன்னுரையாக அறிமுகம்

0 180

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

30•6•2016,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(1) மனிதனே புனிதன்!
•••••••••••••••••••••••••••
வணக்கம்! குருஈஸ்வராலய மெய்யன்பர்களே!

முன்னுரையாக அறிமுகம்.
****************************
உலகில் சிறந்து விளங்கும் ஞானபூமியான பாரத தேசத்தில், புண்ணியம் பெற்று விளங்குவது தமிழ் திரு நாடு.

அங்கு வந்தாரை வாழ வைக்கும் அன்னை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர், ஆளுகைக்கு உட்பட்ட மதுரையம் பதியிலே வசித்து வரும், ஈஸ்வர குமாரர் தொண்டன் M.மேகநாதனின் பணிவான நன்றியும், வணக்கமும்.

எங்களது இல்லத்திற்கு அருகில் தவயோகி ஸ்ரீ வேணு கோபால சுவாமி அவர்கள் வாழ்ந்து வந்தார். அவருடன் இருந்து சீராட்டிப் பாராட்டி வளர்ந்து வரும் பாக்கியம் பெற்றேன்.

அவரால்தான் தவத்திரு நாகராஜ சுவாமியின் தொடர்பு எனக்கும் கிடைத்தது.நமது சுவாமியுடன் சேர்ந்து தவத்தில் ஈடுபடும் வாய்ப்பு அதிகம் கிடைத்தது.

அவரின் தியான வழிமுறைகள் மிகவும் சுலபமாக, உணர்ந்து செயல்பட ஏற்றுக் கொள்ள முடிந்தது.ஆன்ம முன்னேற்றம் தானே உணரும் வழிகளால் அடையப் பெற்றேன்.இதனை அடக்கமாக சொல்லிக் கொள்ள
விரும்புகிறேன்.

குருஈஸ்வராலய மெய்யன்பர்களின் வேண்டுகோள் மற்றும் எனது தணியாத தன்னார்வம் காரணமாகவும், இச்சிறு வரலாற்றுக் குறிப்பு கையேடு உதயம்.

அதனைச் சொல்வதற்கு முன்னால், தவத்திரு நாகராஜர் சுவாமியின் குருநாதர் பற்றிய செய்திகளை, ஞானயோகி ஸ்ரீ வேணு கோபால சுவாமியிடம் தெரிந்து கொண்டிருக்கிறேன்.

பின்னர் பழனி திரு நடராஜ சுவாமியிடம் இருந்து சற்குரு ஸ்ரீ ஈஸ்வர குருநாதர் பற்றியும், நமது தவத்திரு நாகராஜ சுவாமி பற்றியும் கேட்டறிந்துள்ளேன்.

அதன் பின் நமது சுவாமியிடம் இவர்கள் எல்லோரைப் பற்றியும் அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது எனது பாக்கியமே!

ஸ்ரீ ஈஸ்வர சற்குரு நாதர் அவர்கள் தேர்ந்தெடுத்த மூன்று
முத்துக்களில், தன் சமாதியை பூஜை வழிபாடு நடத்திட திரு நடராஜ் சுவாமியைத் தேர்வு செய்தார்.

இரண்டாவதாக தவத்திரு வேணு கோபால சுவாமியை தனது ஞானக் கருத்துக்களை மக்களுக்குச் சொல்ல நியமித்தார்.

மூன்றாவதாக தவத்திரு நாகராஜர் சுவாமியிடம் தெய்வீக உண்மைகள், பிரார்தனைகள், வானியல் மற்றும் எத்தனையோ இரகசிய விஷயங்களைப் போதனைப்படுத்தி இருக்கிறார்.

தற்பொழுது தவத்திரு சுவாமி நாகராஜர் மட்டுமே இருக்கின்றார். இவர் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியின் கருத்துக்களைக் கடல் கடந்த வெளி உலகிற்கும் உபதேசித்து வருகின்றார்கள்.

தவத்திரு நாகராஜர் சுவாமியைப் பற்றி அறிந்து கொள்ளும் முன் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதி சற்குரு நாதர் பற்றிய குறிப்புகளைத் தெரிந்து கொள்வோம்.

(மனிதனே புனிதன் தொடர்ந்து வரும்) நன்றி!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரர் தொண்டன்
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button