ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்.

0 241

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்.

S.சிவசண்முகம்,
பொள்ளாச்சி.

குருஈஸ்வராலய பக்தர்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த வணக்கம்.

முதற்கண் எனது முதல் தெய்வங்களாகிய அம்மா அப்பா அவர்களை வணங்குகிறேன்.

தவத்திரு நாகராஜர் சுவாமிஜி அவர்களுக்கு பணிவான நன்றியும் வணக்கத்தையும் கூறிக்கொண்டு, அவரைப்பற்றிய சில செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

பொருமதிப்பிற்குரிய
திரு வாலைகுருநாதர் வம்சத்தில், 1950 – வது வருடம் ஆவணி மாதம் வியாழக்கிழமை
நடுநிசியில் அபிஜின் முகூர்த்த வேளையில்,

திருமதி. பாப்பம்மாள் நாச்சியார் – திரு.மயில்சாமி ஐயா அவர்களுக்கு, மூன்றாவது திருமகனாக அவதரித்தவர் தவத்திரு நாகராஜர் சுவாமி.

சிறுவயது முதல் தீபஒளி கண்டு மகிழ்ந்தவருக்குத் தனது ஏழாவது வயதில், தெய்வீக ஒளிக்காட்சி கிடைக்கப் பெற்றார்.

தவத்தில் ஈடுபாடு கொண்ட இவர், பள்ளிப் படிப்போடு தெய்வீகப் படிப்பையும், சுவாமி தமது தாய் வழிப்பாட்டி தவத்திருமதி பொன்னம்மாளிடம் கற்று வந்தார்.

தந்தையின் மிகுந்த கட்டுப்பாடு காரணமாக தமது பதினான்கு வயதில் இரவு நேரங்களில், மிக அருகில் இருந்த ஆழியாற்றின் கரையில் அமர்ந்து, தவம் புரிந்து வரலானார்.

தவம் இயல்பாகவே இவருடன் தெய்வீகமாக இருந்து வந்தது.

மேலும் ஏழு ஆண்டுகள் தவத்திற்குப் பிறகு, அவரின் இருபத்தி ஓராவது வயதில் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதி ஆண்டவரால், பரிபூரணமாக ஆட்கொள்ளப்பட்டார்.

தாம் அறிந்து கொண்ட தெய்வீக கருத்துக்கள் அனைத்தையும், துன்பப்படும் மக்களுக்கு நல்ல அறிவுரை கூறியும், உதவிகள் செய்தும் வந்தார்.

சுவாமியினுடைய கருத்துக்கள், பிரார்த்தனைகள், பரிகாரங்கள் அனைத்துமே, மனித வாழ்க்கையின் மேம்பாடு, வெற்றி, மனப்பக்குவம் பற்றியதாக இருந்தது.

அவர் கூறும் கருத்துக்கள் சிறு குழந்தைகளுக்குக் கூட புரியும்படி இருந்தது விசேஷமானது.

பெற்றோர் தங்கள் குழந்தைகளை இவரிடம் அழைத்து வந்து, இவர் கூறும் கருத்துக்களைக் கேட்கச் செய்து, முன்னேற்றம் பெறச் செய்து வருவது இன்றும் நடந்து வருகிறது.

குழந்தைகள் இவர் கூறுவதை ஆர்வமுடன் கேட்டு, அறிவுடன் நடந்து கொள்வதும் எல்லோருக்குமே ஆச்சர்யம் தான்!

பொதுவாக சுவாமியின் கருத்துக்கள் மனித குலம் நன்றாக வாழ வேண்டும் என்பதாகவும், அதற்குரிய வழிவகைகளைக் கூறுவதாகவும் இருந்தது.

சுவாமியைச் சந்திக்கும் ஒவ்வொரு குடும்பமும், தாங்கள் பேறு பெற்றவர்களாகவும், மதிப்பு மிக்கவர்களாகவும், வெற்றி பெற்றவர்களாகவும், தங்களை உணரத் தொடங்கினர்.

இன்றளவும் அவரது பணிகள் தொடர்ந்து கொண்டுள்ளது.

தூற்றுபவர்களையும், போற்றுபவர்களையும் அவர் சமமாகவே மதித்து, சமாதானத்தையும், ஆறுதல்களையும் கூறி வந்தார்.

ஒவ்வொரு குடும்பமும் முன்னேற்றம் அடையவும்,
செல்வச் செழிப்போடு வாழவும்,
கடமையை உணர்ந்து உழைக்கவும்,
கவலையற்ற சந்தோஷமான மனநிலையில் பிரார்த்தனைகள் இருக்க வேண்டும் என்பதோடு, மன்னிக்கும் மனநிலையைப் புரியும்படி, உறுதிபடத் தெளிவாக விளக்க வந்தவர்!

அன்னதானம் செய்வதாலும்,
தர்ம சிந்தனையைக் கொள்வதாலும்,
சந்தோஷ மனநிலை வருவதாலும் பாவங்கள் தீர்ந்து, சுபிட்சமான வாழ்வு வாழ முடியும் என்று தினமும் வலியறுத்தி வருகிறார்.

குழந்தைகள் அனைவரும் அவரிடத்தில், அன்பையும், முன்னேற்ற மனநிலையும் பெற்று, உயர்வு அடைவது நிதர்சமான உண்மை!

பக்தர்களே! அன்பர்களே! வாருங்கள்! நாமும் அவரை சந்தித்து வாழ்வின் முன்னேற்றங்களை அடைவோம்!

மிகவும் நன்றி!
அன்பார்ந்த குருவின் அருமைச் சீடன்
S.சிவசண்முகம்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button