குட்டியைக் காப்பாற்றிய யானை!

0 156

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

10•08•2016,
புதன்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(37) மனிதனே புனிதன் —
குட்டியைக் காப்பாற்றிய யானை!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எல்லா உயிர்களிலும் ஸ்ரீ ஈஸ்வரரைக் காணுகின்ற குரு ஈஸ்வராலயப் புனித ஆத்மாக்களுக்குத் தூய்மை மிகுந்த மனம் ஏற்படுகிறது! ஏழை செல்வந்தர் என்ற பாகுபாடுகள் தோன்றாது! வயது வேற்றுமைகள் இன்றி எல்லோரையும் நேசிக்கும், மரியாதை செலுத்தும், நற்குணங்கள் உண்டாகின்றது! ஜாதி வேற்றுமைகள் பார்க்காமல் எல்லோரையும் நேசிக்கிறார்கள்! இன, நிற வேற்றுமைகளும் பார்பது இல்லை! எந்த மொழி பேசினாலும் அவர்கள் சகோதரர்களே! தாழ்வு மனப்பான்மையும் நீங்கி விடுகின்றது! தங்கள் தேவைகள் ஈடேற ஆண்டவனுக்கு நன்றியைத் சொல்லிக் கொண்டே இருக்கும், மனதின் பக்குவம் ஏற்பட்டு விடுகிறது! வாழ்க்கையில் நடைபெறும் எத்தகைய அனுபவத்தையும், அது நன்மைக்கே என ஏற்றுச் செயல்படுவார்கள் !

தோப்பு மலையில் சுவாமியும், மாயனும் மாலை மூன்று மணிக்குத் தாடகை நாச்சியார் வனம் போகும் பாதையில், சிறிது தூரம் நடந்து சென்று ஏகாந்தமாக அமர்ந்து கொண்டனர். “மாயன்! நீ சொல்ல வரும் விஷயத்தை இங்கு என்னிடம் கூறவேண்டும்” என்று சுவாமி கேட்டதும் மாயன்,”நாளைக்குப் சொல்கிறேன். அதுதான் விஸ்வாமித்திரரிஷி வனராணி தாடகையை அம்மனாக உருவாக்கிய இடம்” என்று தொலைவில் மலையின் உச்சியில் இருக்கும் உயரமான மரங்கள் அடர்ந்த ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டினார்.

பிறகு “சுவாமி தாமரைப்பூ பார்த்து இருக்கிறீர்களா?” என்று கேட்டார். சுவாமி சிரிக்கவும் மாயன், “சுவாமி எனக்குப் புரியுது. நான் சொல்வது மரத்தில் பூக்கும் தாமரையை!” என்றார். பிறகு சுவாமியை அழைத்துச் சென்று அந்த இடத்தைக் காட்டினார்.

சற்று உயரமான மரம் தான். இலைகள் பெரியதாக சாம்பல் பூத்தது போன்று கரும் பச்சை நிறத்தில் இருந்தது. கிளைகளில் இருந்து தாமரைக் தண்டு போன்று வெளிப்பட்டுப் பூக்கள் கொஞ்சம் நீலம் மற்றும் மஞ்சள் கலந்த வண்ணமாக இருந்தது! சுவாமி அங்கு சற்று நேரம் தியானத்தில் ஆழ்ந்து இருந்தார்.
மாலை நேரம் காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்டமாக கோயிலை நோக்கி வரத் துவங்கின. மாயனும், சுவாமியும் கோயிலுக்குள் சென்று அஙுகுள்ள மண்டபத்தில் அமர்ந்து கொண்டனர். பக்தர்கள் உணவு சாப்பிட்டு விட்டுப் போட்டிருந்த உணவின் மிச்சங்களைச் சாப்பிட்டு விட்டு உறுமிக் கொண்டும், சண்டை போட்டுக் கொண்டும் இருந்தன.

இரவில் காட்டு யானைகள் சில கோயில் முன்பு இருக்கும் பிள்ளையார் முன்பு, பக்தர்கள் வைத்து விட்டுப் போன பழங்களைச் சாப்பிட்டு விட்டு, பிள்ளையார் மீது பூசியிருக்கும் நல்லெண்ணையை துதிக்கையால் தடவி எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. கோயில் முழுக்க ஆள் உயரம் கருங்கற்கள் கொண்டு மதில் சுவர் கட்டப்பட்டிருந்தது.

அங்கே வாயு மூலையில் தகரக் கொட்டகையில் சமையல் நடக்கும். அசைவ உணவு தயாரிப்பவர்கள், வெகுதூரம் சென்று ஓடைக்கரையில் சமைப்பர். ஆனால் கோயிலில் சைவ உணவு தயாரிக்கவே அனுமதி. சாப்பிட்ட பிறகு இலைகளை வெளியே கொட்டுவதற்கு வடக்குப் பகுதியில் ஒரு சிறிய வழி இருந்தது. அதன்வழியே ஓடி விளையாடிக் கொண்டிருந்த சிறிய யானைக் குட்டி ஒன்று எப்படியோ நுழைந்து விட்டது.

நுழைந்து சமைத்து விட்டு அடுப்பில் இருந்து எடுத்துக் கொட்டிய நெருப்பு சாம்பலைக் கால்களால் மிதித்தும் விட்டது. அது கதறிய கதறலால் யானைகள் இங்குமங்கும் ஒடிப் பிளிறி கூச்சல் இட்டன. கோயிலுக்குள் நுழைய முயற்சி செய்தன. குட்டி யானைக்கு வெளியேறவும் வழி தெரியாமல் மடப்பள்ளி வரை ஓடிக்கதறியது.
வெளியேறும் வழி புரியவில்லை!

இதற்குள் தாய் யானை மேற்குப்புற மதிலைத் தகர்க்க ஆரம்பித்து! தீனக்குரல் கொடுத்து அழுதது. ஆண் யானைகள் சேர்ந்து மேல் புற மதிலைத் தகர்த்து விட்டதால், பெண் யானை உள்ளே நுழைந்து சமையல் செய்யும் இடத்திற்கே வந்து தனது குட்டியை அரவணைத்துக் கொண்டது.

குட்டி யானையை அழைத்துச் செல்லும் போது மற்ற யானைகள், அங்கு போடப்பட்டிருந்த தகரக் கொட்டகையை உடைத்துத் தள்ளி விட்டுச் சென்றன. சுவாமியும் மாயனும் தங்கி இருந்த காங்கிரீட் மண்டபம் தாழ்வாக இருந்ததால் யானைகள் நுழையவில்லை. இருவரும் தியானத்தில் அமர்ந்து கொண்டனர். அதி காலையில் எழுந்து கிருஷ்ணன் ஓடையில் குளித்து விட்டு, அவல், சர்க்கரையை எடுத்துக் கொண்டு தோப்புமலை உச்சியை நோக்கி மெல்ல பயணத்தைத் தொடர்ந்தனர்.

வழிநெடுக வனவேடர்கள் பரம்பரையாகத் தங்களின் குடும்பத்தில் சொல்லப்பட்டு வரும், குலகுரு வான்மீகி முனிவன் கதையைச் சொல்லியபடியே மாயன் நடக்க, களைப்பு ஏதுமின்றி இருவரும் வழிநடந்தனர்.

நன்றி! வணக்கம்!

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button